நாகர்கோவிலில் பரபரப்புபரபரப்பு மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன் போலீசில் சரண்

நாகர்கோவில் அடுத்த ஆசாரிப்பள்ளம் வசந்தம் நகரில் நீலாவதி என்ற பெண் (வயது 42 )வீட்டில் கழுத்தில் கத்தி குத்துடன் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொலையுண்ட நீலாவதியின் கணவர் போலீசில் சரணடைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளம் வசந்தம் நகரில் நீலாவதி என்ற பெண் அவரது வீட்டில் கழுத்தில் கத்தி குத்திய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.இது குறித்து போலீசார் தரப்பில் தெரிவித்தது என்னவென்றால் நேற்று இரவு மூன்று மணியளவில் நீலாவதி வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டதாக ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திற்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து விரைந்து சென்று அலறல் சத்தம் கேட்ட வீட்டில் பார்த்த போது நீலாவதி என்ற பெண் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் உடனே உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் விசாரணையில் கொலையுண்ட பெண்ணின் உறவினர்களான கணவனும் அவர்களது மகனும் வீட்டில் இல்லாததால் உறவினர்கள் மீது சந்தேகம் ஏற்படவே கொலையுண்ட நீலாவதியின் கணவர் இராமகிருஷ்ணனிடம் விசாரித்ததில் அவர் அப்ரூவராக மாறி தன் மனைவி நீலாவதியை தான் கொன்றதாக நடந்த உண்மையை வாக்குமூலமாக கூறி போலீசில் சரணடைந்தார்.

இராமகிருஷ்ணன்-நீலாவதி தம்பதியினர் ஆசாரிப்பள்ளம் வசந்தம்நகர் பகுதியில் புதிதாக வீடுகட்டி வீட்டின் மேல் தளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார் வீட்டிற்கு கீழே மரக்கடசல் பட்டறை நடத்தி வந்துள்ளார். கணவன் மனைவி இவருக்கும் அஜித் என்ற ஒரு மகன் இருக்கிறான்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக இராமகிருஷ்ணனுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட காரணத்தால் இருவர் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் கோபத்தில் இராமகிருஷ்ணன் தனது மகனை அழைத்து கொண்டு அவரின் பூர்வீக வீட்டிற்கு சென்று வாழ்ந்து வருகின்ற நிலையில் அவரது மகன் பணிமுடிந்து அதிகாலை வீட்டிற்கு வரும் வேலையில் தனது தாயாரின் வீட்டின் அறையில் விளக்கு எரிவதை பார்த்து தந்தையிடம் தெரிவித்ததில் ஆத்திரம் அடைந்த இராமகிருஷ்ணன் தனது மனைவி இன்னொருவரிடம் இரவில் உல்லாசத்தில் இருந்ததை நினைத்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் இது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் நடந்தவற்றை கூறி போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.

Leave a Reply