அயோத்தியில் ராமர் கோயில் இந்தியா மறு புத்துணர்வு பெறும்…பொன்.ராதாகிருஷ்ணன்..!

அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்று நேற்று பூமிபூஜை நடந்தது இதையொட்டி குமரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவரது அலுவலகத்தில் ராமர் படத்திற்கு மாலை அணிவித்து, நிருபர்களிடம் கூறியதாவது.

அயோத்தியில் அவதரித்த ராமச்சந்திரமூர்த்திக்கு விக்ரமாதித்தன் மன்னர் ஆலயம் கட்டினார். கடந்த 1600ம் ஆண்டுகளில்பாபர், தளபதிகள் துணையோடு மசூதி எழுப்பப்பட்டது. இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டவேண்டும் என பல கட்ட போராட்டங்கள் நடந்தது.

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமான கட்டுப்பாட்டால் தொலைகாட்சியில் இந்தநிகழ்வுகளை பார்த்து வருகிறேன். 130 கோடி மக்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.

3 ஆண்டுகளில் கோயில் கட்டி முடிக்கப்படும். கோயில் திறந்த பிறகு அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள். அயோத்தி பிரச்சனையில் யார் முதல் வழக்கு தொடர்ந்தாரோ அவருக்கு முதல் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கோயில் கட்டுவதால் இந்தியா மறுபுத்துணர்வு பெறும். அத்வானி, ஜோஷி பங்கேற்க அனுமதியில்லாதது தொடர்பாக இன்றைய சூழ்நிலையில் என்ன முடிவு எடுத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை என்றார்.

பேட்டியின் போது மாநில செயலாளர் உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், முன்னாள் நகர்மன்ற தலைவி மீனாதேவ், மண்டல் தலைவர்கள் அஜித்குமார், சிவபிரசாத் ராகவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply