குமரி மாவட்ட SDPI கட்சி சார்பில் ராமர் கோவில் கட்டும் திட்டத்தை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோவில் கட்டும் திட்டத்தை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாகர்கோவில் அடுத்த இளங்கடையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு தழுவிய அளவில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் குமரி மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில், பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோவில் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும், சிறுபான்மை மக்கள் விரோத முத்தலாக் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.

இந்தியாவின் பொருளாதார பேரழிவை கொரோனா பெயரை சொல்லி மறைக்காமல் நல்ல நிர்வாகத்தை மக்களுக்கு வழங்கிட வேண்டும் என நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமரி மாவட்டம் கோட்டார் இளங்கடையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி தலைவர் ஜாபர் அலி தலைமை தாங்கினார்.இதில் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர், நிர்வாகிகள்,மற்றும் ஜமாத் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply