குமரி மாவட்ட இந்து மகாசபா சார்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அயோத்தியில் இன்று ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படுவதை முன்னிட்டு குமரி மாவட்ட இந்து மகாசபா சார்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஏராளமான தலைவர்கள் கலந்து கொன்றனர்.

நாடு முழுவதும் உள்ள இந்துக்களில் மத்தியில் மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் இருந்து புனித நதிகளில் இருந்து புனித நீர், புனித மண் போன்றவை அயோத்தி ராமர் கோவிலுக்கு கொண்டு சொல்லப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவினை முன்னிட்டு குமரி மாவட்ட இந்து மகாசபா சார்பில் மாவட்டத்தில் வடசேரி, கோட்டார், பீச் ரோடு உள்ளிட்ட பல இடங்களில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதில் அகில பாதர இந்து மகா சபா அகில இந்திய துணை தலைவர்.தா.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைப்பெற்றது.உடன் எஸ்.எம்.ராஜேஸ் கோட்ட செயலாளர்)மற்றும் மாவட்ட தலைவர். சிவகுமார்,மாவட்ட இளைஞரணி. தலைவர்.மனோஜ்நகய செயலாளர். நவீன்,அச்சகர பேரவை.நம்பி கிருஷ்ணன்,ரவி,ஜெனிஸ் பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply