அயோத்தி ராம ஜென்ம பூமியில் கோவில் அடிக்கல் நாட்டு விழா குமரி மாவட்ட பாஜக பொருளாளர் சிறப்பு யாகம்..!

அயோத்தி ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற வேண்டி குமரி மாவட்டம் வெள்ளாடிச்சிவிளை ஊராமக்கள் சார்பில் குமரிமாவட்ட பாஜக பொருளாளர். முத்துராமன் தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இன்று அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது. அதற்காக இந்தியா முழுவதும் ராம பக்தர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

தங்களது வீடுகளில் இருந்தும் ஊர் கோவில்களில் யாக பூஜைகள் செய்தும்,பட்டாசுகள் வெடித்தும்,இனிப்புகள் வழங்கியும் மிக சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். அதை போல் இன்று குமரிமாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வெள்ளாடிச்சி விளை ஊர் மக்களை ஒன்றிணைந்து குமரிமாவட்ட பாஜக பொருளாளர். முத்துராமன் அவர்கள் தலைமையில் வெள்ளாடிச்சிவிளை பிள்ளையார் கோவிலில் வைத்து சிறப்பு யாகத்தை நடத்தினார்.

அயோத்தியில் ராமஜென்ம பூமியில் கட்டப்படும் ராமர் கோவில் எந்த வித தடையுமின்றி நடைபெறவும்,உலக மக்கள் அனைவரும் கோரோனாவில் இருந்து மீண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டியும் யாகம் நடைப்பெற்றது.இதில் பெண்கள், குழந்தைகள் என ஊர்மக்கள் அனைவரும் யாகவேள்வியில் தானியங்களை செலுத்தி வேண்டுதலில் ஈடுப்பட்டனர்.

பின்னர் ராமபிரானுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. அதேபோல் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி குமரி மாவட்ட பாஜக பொருளாளர் தலைமையில் கொண்டாடினர்..

Leave a Reply