வடசேரி அம்மா உணவகம் மீண்டும் செயல்படத் தொடங்கியது…!

குமரி மாவட்டத்தில் கொரோன நோய் தொற்று காரணமாக covid care சென்டர் மற்றும் தனிமைப் படுத்தப் பட்டவர்களுக்கான முகாம்களில் இருப்பவர்களுக்கு மூன்று நேரமும் தரமான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் உணவுகளோடு சேர்த்து கபசுரக் குடிநீர், வெஸ் சூப் ,கொண்டை கடலை, பழங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.அதுபோல் நோய்த்தொற்று காரணமாக சீல் வைக்கப்பட்ட வடசேரி அம்மா உணவகம் மீண்டும் செயல்பட ஆரம்பித்ததை தொடர்ந்து அங்கிருந்து உணவு தயாரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு முகாம்களில் இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் அங்கு பணியில் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு, தனிமைப் படுத்தப்பட்ட நாட்கள் முடிந்த பிறகு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply