தமிழக கவர்னருக்கு கொரோனா பரிசோதனை: சென்னை மருத்துவமனையில் அனுமதி!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தங்கியிருக்கும் ராஜ்பவனில் ஏற்கனவே மூன்று பேருக்கும் கொரனோ தொற்று உறுதியாகியுள்ள நிலையில் தற்போது அவருடைய உதவியாளர் உட்பட 87 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இதனை அடுத்து மருத்துவ பரிசோதனைக்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆளுநரின் உடல் நிலை குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது

ஏற்கனவே அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் என சிலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கவர்னர் மாளிகையில் பணிபுரியும் சிலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply