நாகர்கோவில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் நெல்லை மாவட்டம் உவரி அருகில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த நாஞ்சில் முருகேசனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து நாகர்கோவில் அனைத்து மகளீர் காவல் நிலையம் அழைத்தை வந்தனர். காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து காணாமல் போனதாக கோட்டார் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில் அச்சிறுமி நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 20 வயது காதலனுடன் திருமணம் செய்ய திட்டமிட்டு தலைமறைவாகியது தெரிய வந்தது.

அவர்களை கோட்டார் போலீசார் மீட்டு, இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் சிறுமியை விசாரணை செய்ய குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களது விசாரணையில் கடந்த 2017 ம் ஆண்டு சிறுமியின் தாயார் , முன்னாள் எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசனிடம் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக தனது மகளையும் அழைந்து சென்றதாகவும் அங்கு சிறுமிக்கு நாஞ்சில் முருகேசன் பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதேப்போன்று நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மேலும் சிலர் அந்த 15 வயது சிறுமியை பாலியல் தொல்லை அளித்து துன்புறுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்ததின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி புகாரளித்தார்.

புகாரின் பேரில் போக்சோ சட்டம் உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், நாஞ்சில் முருகேசனை பிடிக்க தனிப்படை அமைத்தனர்.இந்நிலையில் கடந்த 3நாட்களுக்கு முன்பு அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., நாஞ்சில் அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டதாக அறிக்கை வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாஞ்சில் முருகேசனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் சிறுமியின் தாயார், நாகர்கோவில் குளத்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாலு (66), கோட்டார் கம்பளத்தை சேர்ந்த அசோக்குமார் (43) , உறவினர் கார்த்திக் (23) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மாணவியிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மாணவியை அவருடைய தாயாரே, முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உள்ளிட்டோருக்கு விருந்தாக்கியது தெரியவந்தது.

தலைமறைவாகியுள்ள நாஞ்சில் முருகேசனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் நாகர்கோவில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் தனிப்படை போலீசார் நெல்லை மாவட்டம் உவரி அருகில் கைது செய்துள்ளனர். மேற்கொண்டு நீதிமன்ற மன்ற காவலில் எடுத்து விசாரிக்கும் போது பல்வேறு உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது…

Leave a Reply