நாகர்கோவில் மகளிர் காவல் நிலையமும் அடைக்கப்பட்டுள்ளது..!

குமரிமாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4380 ஆக உயர்ந்துள்ளது. இதில் கொரோனா தாக்கத்தில் இருந்து குணமடைந்து 2773 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று களப் பணியாளர்களையும் அதிகம் பாதித்து வருகிறது.

அதிலும் குறிப்பாக போலீசாரை குறிவைத்து தாக்குகிறது. குமரிமாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்கள் போலீசாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் காவல் நிலையங்கள் கிறுமி நாசினி தெளிக்கப்பட்டு காவல்நிலையங்கள் தற்காலிகமாக அடைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக வடசேரி,கோட்டார் காவல் நிலையங்கள் அதிகப்படியாக மூன்று முறைக்கு மேல் அடைக்கப்பட்டுவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையமும் அடைக்கப்பட்டுள்ளது. மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களின் கார் டிரைவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து நாகர்கோவில் மகளிர் காவல் நிலையமும் அடைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply