குமரி ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் 8அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!

குமரிமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் அரசு அறிவித்த கொரோனா நிவாரணம் உதவியை உடனடியாக வழங்க கேட்டு 8அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையா ஊரடங்கால் பல்வேறு விதமான தொழில்கள் பாதிக்கப்பட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகியுள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் அமைப்புசார தொழிலாளர்களுக்கு ஊரடங்கு காலத்தில் மட்டும் ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது என்றும் தொழிலாளர்கள் அன்றாடம் உணவு மற்றும் பொருளாதார பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அரசு அறிவித்த கொரோனா நிவாரண நிதியை உடனே வழங்க கேட்டும்.

மத்திய மாநில அரசு நிறுவனங்களிடமிருந்து செஸ் வரி பிடித்தம் செய்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு தடையில்லா பண பயன்கள் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டியும்.

கட்டுமானம்,ஆட்டோ, நகை,நெசவு, முடிதிருத்துவோர் சலவைத்தொழிலாளர் என உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினர் ஆகியுள்ள தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மற்றும் பிஎஃப் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் எனவும்.

கொரோனா பாதிப்பில் தொழில் முடங்கி வாழ்வாதாரத்தை இழந்து உள்ள ஆட்டோ சுற்றுலா வாகனத்திற்கான சாலை வரி மற்றும் இன்சூரன்ஸ் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும்.

அமைப்புசாரா தொழிலாளர் வாரியத்தில் உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஓய்வு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது அவர்களை பட்டினி சாவிற்கு உட்படுத்தாமல் உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும்.

அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்திற்கான உதவித்தொகை ரூபாய் இரண்டாயிரம் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டுமெனவும்.

தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கு ஆன்லைன் பதிவு முறையில் உள்ள குளறுபடிகளை கலைந்து முறைப்படுத்திய பின் ஆன்-லைன் பதிவு முறையை தொடர வேண்டும் எனவும்.

கட்டுமான பணியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் உள்ளதால் அவர்கள் பயன்பெறும் வகையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நலவாரிய அட்டை வழங்க வேண்டுமெனவும்.

கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு திருமணம் மகப்பேறு இயற்கை மரணம் விபத்து உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் உடனடியாக உயர்த்த வேண்டும் என 8 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Reply