தெற்காசிய மீனவர் தோழமை சார்பில் குமரிமாவட்ட ஆட்சியரிடம் மனு..!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் முகத்துவாரத்தில் அலையில் சிக்கி இறந்த மீனவர்கள் குடும்பத்திற்கு தல ரூ 20 லட்சம் மற்றும் நிவாரணம் வழங்க கேட்டும் தெற்காசிய மீனவர் தோழமை சார்பில் குமரிமாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் முள்ளூர் துறையை சேர்ந்த அந்தோணி என்ற மீனவர் தனது மகனுடன் சேர்ந்து பைபர் மர படகில் தேங்காய்ப்பட்டணம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று கொண்டிருந்த போது மீன்பிடி துறைமுகம் முகத்துவாரத்தில் ஏற்பட்ட அலையில் சிக்கி மரபடகு கவிழ்ந்ததில் மீனவர் அந்தோணி கடலுக்குள் மூழ்கி மாயமானார். உடன் சென்ற அந்தோணியின் மகன் நீந்தி கரையை சேர்ந்துள்ளார்.

கடலில் காணாமல் போன அந்தோணியை தேடியும் அவரது உடல் இன்றுவரையும் மீட்கப்படவில்லை அதே போல் மார்த்தாண்டம் துறையை சேர்ந்த நான்கு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து திரும்பிய போது தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள முகத்துவாரத்தில் நுழைந்த போது அங்கு ஏற்பட்ட தொடர் அலையால் மீனவர்கள் சென்ற நாட்டுபடகு கவிந்துள்ளது.

இதில் நான்கு மீனவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் அவ்வழியே வந்த படகில் உள்ள மீனவர்கள் காப்பாற்றி கரையில் சேர்த்தனர். ஆனால் உடன் சென்ற சிபு(25) என்ற மீனவன் பலத்த காயங்களுடன் மூழ்கி மாயமாகியுள்ளான். கடந்த இரண்டு நாட்களாக தேடியும் இன்று வரையும் இவரது உடலையும் தேடி கண்டுப்பிடிக்க முடிவில்லை.

இந்த இரண்டு மீனவர்களின் இறப்பிற்கு காரணமான தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் முகத்துவாரத்தில் தேங்கி உள்ள மணல் மேடுகளை அகற்றுவற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளாத தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுக நிர்வாகமும், கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை நிர்வாகமும், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும் இரண்டு மீனவர்களின் இறப்புக்கு பொறுப்பேற்க வேண்டும்.

இறந்த இரண்டு மீனவர்களின் குடும்பங்களுக்கு நிரந்தர வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள காரணத்தால் இறந்த இரண்டு மீனவர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்ச ரூபாயும் குடும்பத்தில் ஒருத்தருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலையும் வழங்க வேண்டும் என தெற்காசிய மீனவர் தோழமை சார்பில் இறந்த குடும்பத்தினருடன் வந்து ஆட்சியரிடம் உதவி கேட்டு மனு அளித்துள்ளனர.

Leave a Reply