கந்தசஷ்டி விவகாரம் : கறுப்பர் கூட்டத்தை நோக்கி பாய்ந்த மேலும் ஒரு குண்டாஸ்!

சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், செந்தில்வாசன் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல், சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டது. இது இந்து மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து ஏராளமானோர் காவல்துறையில் புகார் அளித்ததோடு, பலரும் கண்டனம் தெரிவித்தும் வந்தனர்.

மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார், கறுப்பர் கூட்டம் என்ற சேனல் மீது  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த அமைப்பைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்திரன், சோமசுந்தரம், குகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் ‘கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், செந்தில்வாசன் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.

Leave a Reply