ஒயிட் மேமொரியல் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் நாகர்கோவில் இரயில்வே போலீசாருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கப்பட்டது

குமரி மாவட்டம் ஒயிட் மேமொரியல் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் நாகர்கோவில் இரயில்வே போலீசாருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரையான ஆர்சனிக் ஆல்பம் 30 சி வழங்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு தொடங்கிய காலகட்டம் முதல் குமரிமாவட்டம் முழுவதும் ஒவ்வொரு ஊராக சென்று பொது மக்களுக்கும்,ஆட்டோ ஓட்டுனர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கும் என இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு மாத்திரையான ஹோமியோபதி ஆர்சனிக் ஆல்பம் 30 சியை ஒயிட் மேமொரியல் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் வழங்கி வருகின்றனர்.

தற்போது குமரிமாவட்டத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதாலும் களப்பணியாளர் அதிக அளவில் பாதிக்கப்படுவதாலும் அவர்களை தற்காத்து கொள்ளும் நடவடிக்கையை ஒயிட் மேமொரியல் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் இரயில்வே போலீசாருக்கும் இரயில்வே பணியாளர்களுக்கும் கோமியோபதி மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் இரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர், நிலைய போலீசார் அனைவரும் முன்வந்து கோமியோபதி மாத்திரையை வாங்கி சென்றனர்.

மாத்திரை உண்ணும் முறையையும் மருத்துவர்களிடம் கேட்டு இரயில்வே போலீசார் தெரிந்து கொண்டனர்..
இதில் ஹோமியோபதி கல்லூரி தாளாளர் டாக்டர். லீலாபாய் இராஜேந்திரன், கல்லூரி முதல்வர் டாக்டர். ரிச்சர்டு பிரங்ளின், மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர். இம்மானுவேல் சரோன்,டாக்டர்.ராகேஷ்,டாக்டர். பிரவீன், டாக்டர்.சிவா மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply