ஆதித்தமிழர் பேரவை சார்பில் மத்திய அரசை கண்டித்து நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் இல்லத்தை சேதப்படுத்தியதை கண்டித்தும் அம்பேத்கரின் இல்லத்தை தேசிய நினைவுச் சின்னமாக அரசு அறிவித்தடவும், அம்பேத்கர் பேரனும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்டாம்பே மற்றும் மனித உரிமை போராளி வரவரராவ் ஆகியோரை விடுதலை செய்ய கேட்டும்.

மலக்குழி மரணங்களை தடுத்திட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மலக்குழிகளை தடைசெய் வேண்டும் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும். மருத்துவ துறையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இட ஒதுக் கீட்டை ரத்து செய்ய வேண்டும்.

என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய மத்திய மாநில அரசுகளை ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்.கி.குமரேசன் (மாவட்ட செயலாளர்) முன்னிலை வகித்தார். மு.மாரிமுத்து மாவட்ட தலைவர் (தலைமை தாங்கினார்), மற்றும் தமிழ் தேவணார், தி.முகம்மது ரகுல், திலீப்குமார், சூர்ய நாராயணன், மு.சண்முக சங்கர், அருள், அருள் ஆனந்த், ராமமூர்த்தி, கணபதி நா,மற்றும் தோழர்.சி.அண்ணாதுரை உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

Leave a Reply