APஅப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி திருவுருவப் படத்திற்கு பொன் ராதாகிருஷ்ணன் மலர்தூவி மரியாதை..!

ஏ பி ஜே அப்துல் கலாமின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் ஏபிஜே அப்துல் கலாமின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்தத் திட்டமும் வரக்கூடாது என ஒரு கூட்டம் செயல்படுவதால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கான திட்டங்கள் வராமல் போனதாகவும் விவசாய வளர்ச்சிக்கான திட்டங்களும் வரவில்லை எனவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட ஒரு சிலருக்காக துறைமுகத் திட்டம் வருவதை பிற நாடுகளின் கைக்கூலிகளாக செயல்பட்டுவரும் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தடுத்ததாகவும் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலம் அமைக்க மாட்டேன் சாலைகள் அமைக்க மாட்டேன் எனக்கூறி பொய்யான வாக்குகளை மக்களிடம் கூறி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தற்போது போலி அரசியல்வாதிகள் கேவலமான அரசியல்வாதிகள் மக்களின் வளர்ச்சிக்கு எவ்வித திட்டமும் இல்லாதவர்களாக இருப்பதாக வசந்தகுமார் எம்.பி.யை குற்றஞ்சாட்டினார்.

Leave a Reply