நாகர்கோவில் ஆதரவற்ற மூதாட்டியை காப்பகத்தில் சேர்த்த போலீசார்..!

நாகர்கோவில் ஒழுகினசேரி ஆராட்டு ரோடு பகுதியில் மூதாட்டி ஒருவர் நீண்ட நேரமாக ஒரு வீட்டின் முன்பு இருந்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் ஆராட்டு ரோடு பகுதியை சார்ந்த அக்கம்பக்கத்தினர் அந்த மூதாட்டியிடம் விசாரித்துள்ளனர்.

ஆனால் அந்த மூதாட்டி எந்தவித பதிலும் தெரிவிக்க மறுத்ததால் அருகே உள்ள கோட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே காவலர் ராபின்சன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி தலைமை காவலர் சுபாஷிடம் மூதாட்டி ஆதரவற்ற நிலையில் இருப்பாதவும் ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லாமல் இருப்பதாக மூதாட்டி தெரிவித்ததை எடுத்து கூறினார்.

உடனே காவல் நிலைய அதிகாரிகள் ஒப்புதலுடன் ஆதரவற்ற அந்த வயதான மூதாட்டியை காப்பகத்தில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அப்பகுதி மக்கள் மட்டுமில்லாமல் காவல் நிலைய ஆய்வாளர் மூதாட்டியை காப்பகத்தில் கொண்டு சேர்த்ததிற்கு தலைமை காவலர் சுபாஷையும் காவலர் ராபின்சனையும் பாராட்டியுள்ளனர்.

Leave a Reply