குமரிமாவட்டத்தில் உயிரிழந்த கொரோனா நோயாளின் உடலை அடக்கம் செய்யும் தன்னார்வலர்கள்..!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மேலும் 165 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 3,646 ஆக உயர்ந்துள்ளது 35 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை மிகவும் பாதுகாப்பாக மாநகராட்சி தகனம் செய்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவரின் உடலை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து இந்தியா முழுவதும் இந்த கொரோனாவால் பலியானவர்களின் உடலை குடும்பத்தினரின் விருப்பின் படி அவர்கள் மத நம்பிக்கை படி தகனம் செய்யும் சிறந்த சேவையை செய்து வருகின்றனர்.

தற்போது குமரிமாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த 3 நபர்களின் உடலையும் நல்லடக்கம் செய்துள்ளனர் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு. அதே போல் நேற்று கொரோனாவால் அனுமதிக்கப்பட்டிருந்த இளங்கடை முஸ்லிம் ஜமாஅத்தை சேர்ந்த 69 வயது முதியவர் சிகிட்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உறவினர்கள் உடலை பெற்று நல்லடக்கம் செய்து தரும்படி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் குமரி மாவட்ட நிர்வாகிகளை கேட்டுக்கொண்டதற்கினங்க நேற்று ( 26/07/2020 } அவரது உடலை பெற்று கோட்டார் , இளங்கடை முஸ்லிம் சமுதாய மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த சேவை அனைத்து மதத்தினரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

Leave a Reply