இந்தியாவில் முதல் புனிதர் பட்டம் பெற்ற கேரளாவை சேர்ந்த அல்போன்சா அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஏர் கேம்ப் சாலையில் உள்ள புனித அல்போன்சா திருத்தல ஆலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஊரடங்கு காரணமாக இந்த திருவிழாவில் பொது மக்கள் பங்கேற்க அனுமதி இல்லாவிட்டாலும் அருட்பனியாளர்கள் ஜெபம், திருபலி உள்ளிட்ட பிரார்தானைகள் முறையாக நடத்தினார்கள்.

கேரளவில் வாழ்ந்த அல்போன்சா மக்களுக்கான சேவைகளோடு கலந்த அருட்பனிகளுக்காக இந்தியாவில் முதல் பெண் புனிதர் பட்டம் பெற்றவர்.

அல்போன்சா அன்னையின் நினைவாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஏர் கேம்ப் சாலையில் பல ஆண்டுகளாக புனித அல்போன்சா திருத்தல ஆலயம் அமைந்து உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று மாலை கொடியேற்றதுடன் தொடங்கியது. எல்லா ஆண்டுகளிலும் இந்த கொடியேற்ற விழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வருகை தருவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் பொது மக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் அருட்பணியாளர்கள் மற்றும் ஒரு சில ஜெப பாடல் பாடும் கன்னியஸ்திரி உடன் ஜெபம், திருப்பலி பூசை உள்ளிட்ட பிராத்தானைகள் முறையாக நடைப்பெற்றது.

பொதுவாக பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா கொரோனா கால தடுப்பு நடவடிக்கைக்காக அரசின் விதிமுறைகளை கடைபிடித்து நாகர்கோவில் அல்போசா திருத்தல திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும் என நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தல ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply