A.P.J.அப்துல்கலாம் அவர்களின் மறுபிறவி மனிதர் மறைவுக்கு இரங்கல்..!

A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பிறவியாக வாழ்ந்த சமூக சேவகர் ஷேக் மைதின் என்ற உடுமலை கலாம் அய்யா மறைவுக்கு இரங்கல் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வும் குமரிமாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் உருவ ஒற்றுமை கொண்ட மனிதர் உடுமலை கலாம் அவர்கள். அதுமட்டும் அல்ல காலம் அய்யா போல் கருணை உள்ளம் சமுக அக்கறை கொண்ட சமூக சேவகர் இந்த உடுமலை கலாம் அவர்கள். இந்த மாதம் ஜூலை 20 தேதி உடல்நல குறைவால் மறைந்தார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த உடுமலை கலாம் அவர்கள் தினசரி 10 நபர்களுக்காவது உதவி சேவை செய்யவில்லை என்றால் தனக்கு தூக்கம் வராது என்று உதவி செய்வதில் கொள்கையுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

உடுமலைபேட்டை ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் ஷேக்மைதீன் (55). இவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு தனது முகத்தில் இருந்த மீசையை எடுத்துள்ளார். மீசை இல்லாத ஷேக்மைதீனின் தோற்றம் அப்துல்கலாமின் தோற்றத்தை போன்று காணப்பட்டுள்ளது. இதையடுத்து ஷேக்மைதீனை உள்ளூர் மக்கள் ‘உடுமலை கலாம்’ என அழைக்கத் துவங்கினர்.

உருவத்தில் மட்டுமல்லாது அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதிலும் கலாமை போன்றே விளங்க வேண்டும் என கருதிய ஷேக்மைதீன் ‘அப்துல்கலாம் நற்பணி மன்றம்’ ஒன்றை துவக்கியுள்ளார். உடுமலையில் உள்ள காமராஜர் நற்பணி இயக்கத்துடன் இணைந்து பள்ளி குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குவது, விளையாட்டு போட்டிகள் நடத்துவது, வயது முதிர்ந்தவர்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவது என பல சமுதாய பணிகளில் ஈடுபட்டு இன்றளவும் பல தன்னார்வலர் மைய்யங்களையும் உருவாக்கி ஏழை எழிய மக்களுக்கு சேவை செய்து பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைந்து பிறருக்காக வாழும் சமூக சேவகராக வலம் வந்தார்.

இவரது சேவைகளை நமது A.P.J.அப்துல்கலாம் அவர்களும் நேரில் பாராட்டியுள்ளார்.தற்போது நமது அப்துல் கலாம் அய்யாவின் உருவ ஒற்றுமை உடைய சமூகசேவகர் மரியாதைக்குரிய ஷேக் மைதீன் என்ற உடுமலை கலாம் அவர்கள் சென்ற வாரம் ஜூலை 20 ம் தேதி உடல்நல குறைவால் இறந்துள்ளார்.

அவரது மறைவை அனுசரிக்கும் விதமாக குமரிமாவட்டம் நாகர்கோவிலில் தன்னார்வல அமைப்புகளை ஒன்றிணைந்து ஷேக் மைதீன் என்ற உடுமலை கலாம் அவர்களுக்கு இரங்கல் நினைவேந்தல் நிகழ்வை நடத்தினர்.

இதில் சுரபி.செல்வராஜ் (சுரபி கல்வி மற்றும் சமுக மேம்பாட்டு அறக்கட்டளை) தலைமை தாங்கினார், முத்துகுமார் (தமிழ்நாடு மாநில தலைவர் INDIAN CONSUMER PRotection council) ஓருங்கினைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். நவின் அந்தோனி தாஸ் (சமுக ஆர்வலர்) நாஞ்சில் விஷ்ணு (நிறுவனர் விவேகானந்தா இரத்ததான குழு) அலோசிஸ் மணி அவர்கள் நன்றியுரை வழங்கினார். மற்றும் காசி விஷ்வநாதன் அவர்களுடன் தன்னார்வலர் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply