வியாபாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்: வடசேரி பஸ் நிலையம்- சந்தையில் 170 கடைகளை திறக்க முடிவு..!

நாகர்கோவில் மாநகராட்சி தற்காலிக சந்தையான வடசேரி பேருந்து நிலையம் மற்றும் கனக மூலம் சந்தையில் மீண்டும் கடைகள் திறக்க அனுமதி.நாகர்கோவிலில் மாநகராட்சி ஆணையர்.திரு.ஆஷா அஜித் அவர்கள் வடசேரி பேருந்து நிலையம் மற்றும் வடசேரி சந்தையில் 170 கடைகளை திறக்க முடிவு செய்துள்ளார்.

கடந்த மாதம் வடசேரி சந்தை மூலம் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து வடசேரி மார்க்கெட் மற்றும் வடசேரி பேருந்து நிலையத்திற்கு சீல் வைத்து அடைத்தனர்.

அதன்பின்பு தற்போது நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் சந்தை ஆகிய இடங்களில் காய்கறிகள் கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவாமல் இருக்க வியாபாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் தற்காலிக சந்தை செயல்பட்டு வந்த நிலையில் அங்கு வியாபாரிகள் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் போலீசார் ஊர்காவல் படையினர் என கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த சந்தைகள் கிறுமி நாசினி தெளிக்கப்பட்டு சீல் வைத்தனர்.

மீண்டும் பொதுமக்களின் தேவைகளுக்காக மீண்டும் சந்தைகளை திறக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பிலும் கோரிக்கையை ஏற்று இரண்டு தினங்களுக்கு முன்பு வடசேரி சந்தைக்கு நேரில் சென்று நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் IAS அவர்கள் பார்வையிட்டார்.

அதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சந்தையிலும் வடசேரி பேருந்து நிலையத்திலும் தற்காலிக சந்தையை திறக்க பல்வே கட்டுப்பாடுகளுடன் கடையின் உரிமையாளர்கள் செயல்பட வேண்டும்.சமூக இடைவெளி,முகக்கவசம் பயன்படுத்த வேண்டும் அரசு தெரிவித்த விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டள்ளது. இன்னும் ஒரு தினங்களில் வடசேரி பேருந்து நிலையம் மற்றும் கனக மூலம் சந்தையில் கடைகள் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் திருமதி.ஆஷா அஜித் IAS அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply