பாலியல் குற்றவாளி காசி வழக்கில்.. மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்..!

வடசேரி காவல் நிலையத்தில் காசி மீது கந்து வட்டி புகார் பெறப்பட்ட மோட்டார் சைக்கிள் வழக்கில் பைக்கின் போலி ஆவணங்கள் தயாரித்து காசிக்கு கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காசியின் கந்து வட்டி வழக்கில் புகார் தெரிவித்த இளைஞரின் விலை உயர்ந்த பைக்கை போலி ஆவணங்கள் காசி தயார் செய்து தனக்கு சொந்தமாக்கியுள்ளான்.இது தொடர்பாக பல்வேறு விதமான விசாரணைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் ஆர்சி புக் போலியாக தயாரித்து காசிக்கு கொடுத்த நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த புரோக்கர் நாராயணன் என்பவரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

காசியின் வழக்கில் அவனது தந்தையுள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.காசி வழக்கு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காசி வழக்கில் மொத்தம் கைது செய்யப்பட்டவர்கள். காசி மற்றும் காசியின் தந்தை,முதல் கூட்டாளி டேசன் ஜினோ,தினேஷ்,தற்போது போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த வழக்கில் நாராயணன். இந்த 5 பேரிடமும் விசாரணை தீவிரப்படுத்தி வருகின்றனர் சிபிசிஐடி போலீசார்.

Leave a Reply