பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா..!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நாகர்கோவில் கோட்டார் இளங்கடை பறக்கை ரோடு , அப்துல் காதர் மருத்துவமனை எதிர்ப்புறம் உள்ள S.M காம்ப்ளக்ஸில் வைத்து நடைபெற்றது.

இதில் மாவட்டத்தலைவர் S.F. முஹம்மது ஜிஸ்தி தலைமை தாங்கினார் . இந்நிகழ்ச்சியில் குமரி மாவட்ட அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் துணைத்தலைவர் K. முஹம்மது ஃபாரூக் அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

மாவட்ட செயலாளர் B. சத்தார் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் , SDPI கட்சியின் குமரி மாவட்ட பொறுப்புத்தலைவர் A. சுல்பிகர் அலி , கன்னியாகுமரி மாவட்ட அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் பொருளாளர் G.M.S. ஷஃபீக் , கோட்டார் – இளங்கடை முஸ்லிம் சமுதாய ட்ரஸ்ட்டின் தலைவர் பாவலர் சித்தீக் , பெருவிளை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஷாகுல் ஹமீத் , ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநில செயலாளர் அப்துர்ரஹ்மான்

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் மெளலவி சவுக்கத் அலி உஸ்மானி , ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர் . இறுதியாக மாநகரத்தலைவர் M. முஹம்மது சலீம் நன்றி உரையாற்றினார் . இந்நிகழ்ச்சியை மாவட்ட மக்கள் தொடர்பாளர் M. ஷேக் நூறுதீன் தொகுத்து வழங்கினார்.

Leave a Reply