நாகர்கோவில் பிரதான சாலையில் போக்குவரத்துக்கு தடை..!

நாகர்கோவில் மாநகராட்சியின் பாதாள சாக்கடை பணி வேகமாக நடைப்பெற்று வருகிறது இந்த வருட இறுதியில் முடிக்க வேண்டி பணிகள் நடைப்பெற்று வருகிறது.தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவு காரணத்தினாலும் பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்ட காரணத்தினாலும் பணிகள் வேகம் எடுத்துள்ளது.

பொதுவாக கடந்த ஒரு மாத காலமாக இந்த பணி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வரும் நாகர்கோவில் பேருந்து நிலையம் செல்லும் சாலைகளில் பாதாள சாக்கடைக்கு கழிவு நீர்களை கொண்டு செல்லும் பெரிய அளவிலான பைபுகள் மற்றும் தொட்டிகள் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

அதேபோல் கோட்டார் செட்டிக்குளம் பகுதி செல்லும் சாலைகளும் பாதாள சாக்கடை பணிகள் நடைப்பெற்று வருகிறது. நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது மக்கள் தொகை அதிகரிப்பையொட்டி பாதாளசாக்கடை கட்டாய தேவை என்ற நிலைப்பாட்டில் ரூ.76.4 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணி கடந்த மார்ச் 2013ம் ஆண்டு தொடங்கியது.

நாகர்கோவில் மாநகராட்சியில்மொத்தம் 52 வார்டுகள் உள்ளன..

மாநகராட்சி பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் செயல்படுத்தி வருகிறது. மொத்தம் 118.86 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்க தொடங்கிய பணி 102.76 கிலோ மீட்டருக்கு முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் நடந்து வருகிறது. இதில் சுமார் 16 கிலோ மீட்டர் அளவிற்கு பணிகள் சிக்கலான பகுதியாக உள்ளது. குறிப்பாக குறுகலான தெருக்களில் கழிவுநீரோடைகள் செல்லும் பகுதிகள் உள்ளன. அந்த பகுதியில் பணிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணி தொடங்கி 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முடியவில்லை. நீதிமன்ற வழக்கு, நெடுஞ்சாலைதுறை அனுமதி என சில இடர்பாடுகளால் பாதாளசாக்கடை பணி முடிவடைய காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

நாகர்கோவில் நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாதாளசாக்கடை வழியாக வரும் கழிவுகள் வடிவீஸ்வரம் பறக்கிங்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வலம்புரிவிளை உரக்கிடங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு கழிவுகள் உரமாகவும், நீர் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தினமும் 175 லட்சம் லிட்டர் தண்ணீர் இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் பிரிக்கும் வகையில் 2 பிரமாண்டமான பிளாண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுத்திகரிப்பு நிலையம் ரூ.17 கோடியிலும், பறக்கின்கால் பகுதில் அமைக்கப்பட்டுள்ள கழிநீரேற்று நிலையம் ரூ.6 கோடியிலும் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சுமார் 10 கிலோ மீட்டருக்கு பாதாளசாக்கடை பணி நடக்கவேண்டியுள்ளது. கலெக்டர் அலுவலகம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணி செய்யவேண்டியுள்ளது.

Leave a Reply