தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம்..!

தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அரசு போக்குவரத்து கழகத்தில் தலித் பணியாளர்களை சாதி ரீதியாக துன்புறுத்தி வரும் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

குமரி மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தலித் தொழிலாளர்கள் மீது சாதி ரீதியாக துன்புறுத்தி வரும் கிளை மேலாளர் 2 மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடந்த ஒரு மாதம் முன்பு புகார் கொடுக்கப்பட்டது.

எனினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் நிறுவர் தினகரன் தலைமையில் குமரி மாவட்டத்தில், மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரசு போக்குவரத்து பணிமனை உட்பட 30 இடங்களில் மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரை உடனடியாக பணிநீக்கம் செய்யக் கோரி தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

Leave a Reply