கருப்பர் கூட்டத்திற்கு எதிராக வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்பு போராட்டம்.!

கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்பு பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கந்த சஷ்டி கவசம் குறித்து கறுப்பர் கூட்டம் என்ற யூட்யூப் சேனலில் விமர்சித்து வீடியோ வெளியிடப்பட்டது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், கறுப்பர் கூட்டம் சேனலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்பு பக்தர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Leave a Reply