கடன் தவணையை மிரட்டி வசூலித்து வருவதால் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த பெண்கள் கண்ணீர்..!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமரிமாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடனை தனியார் நிறுவனங்கள் வசூலிக்க கெடுபிடி செய்வதாகவும் தற்கொலை செய்யும் அளவிற்கு அவர்கள் தூண்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் தெரிவித்தனர்.

சுய உதவிக்குழு மூலமாகவும்,பைனாஸ் நிறுவனங்கள் மூலமாகவும் வாங்கப்பட்ட பொருட்கள் மற்றும் கடன்தொகைக்கு வட்டிக்கேட்டு மிரட்டி வருவதாகவும் ஏழை பெண்களுக்கு கொரோனா கால சூழ்நிலை காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் குடும்பங்களால் கடன் வாங்கிய தொகைக்கு தற்போது வட்டி கட்ட முடியாத நிலை உள்ளதால் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்கள் எங்கள் நிலையை புரிந்து கொள்ள வேண்டும் என்று அதற்கு அரசு நிறுவனங்களிடம் கால அவகாசத்தை பெற்று தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு தனியார் நிதி நிறுவனங்கள் கடன் வழங்கி உள்ளன இந்தக் கடனை தற்போதைய கொரானா பாதிப்பு சூழ்நிலையில் பொதுமக்கள் வேலை இல்லாததால் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் ஆனால் கொடுத்த கடனை திருப்பிக் கட்ட வேண்டும் என்று தனியார் நிறுவனங்கள் அவர்களை கெடுபிடி செய்து வருகிறார்கள்.

இதனால் கடன் வாங்கிய பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள் இரவு நேரங்களில் போன் செய்து அவர்களை மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்கொலை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெண்கள் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தங்களை தனியார் நிறுவனங்கள் வாங்கிய கடனை உடனடியாக திருப்பி செலுத்த வலியுறுத்தி கெடுபிடி செய்வதுடன் மிரட்டி வருவதாகவும் புகார் செய்தனர்.

பணத்தை நாங்கள் கட்டாமல் இருக்கமாட்டோம் கண்டிப்பாக கட்டுவோம் அதற்கு கால அவகாசம் வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இவர்களுக்கு அதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமரிமாவட்ட ஆட்சியரை சந்தித்த மனு அளித்துள்ளனர்.

இதில் சி.பி.எம்.மாவட்ட குழு உறுப்பினர். எஸ்.அந்தோணி தலைமை,மாவட்ட செயற்குழு உறுப்பினர்.அகமது உசைன், அருணாசலம்,மோகன், எஸ்.அமலா, M.ராமாலட்சுமி, T.ராணி, G.சுதா, சாந்தி, விஜயா, அனுஸ்யா, லெட்சுமி தங்கம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply