தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு அ.தி.மு.க.வினர் ஊட்டச்சத்து பொருட்கள் வினியோகம்..!

தக்கலை தலைமை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பழங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார்.

பத்மநாபபுரம் நகர செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் ராஜா, நகர அவைத்தலைவர் ஜாண்ரோஸ், பத்மநாபபுரம் நகராட்சி முன்னாள் துணை தலைவர் பீர்முகமது, இலக்கிய அணி செயலாளர் அருண்ராஜா, செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply