சுகாதார பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும், 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், கோதநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தக்கலை வட்டார அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கோதநல்லூர் சுகாதார நிலைய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தக்கலை வட்டார செயலாளர் சுனந்தா தலைமை தாங்கினார். துணை செயலாளர் சுஜா ஜாஸ்பின் விளக்கவுரையாற்றினார். சரோஜினி, ராஜகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply