எம்.பி வசந்தகுமார் கோரிக்கை…. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்களின் உரிமைகளை பறிக்க கூடாது.

மத்திய தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவரிடம் தெரியப்படுத்த வேண்டும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரும் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் எச்.வசந்தகுமார் , எம்.பி. , அறிக்கை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்களின் உரிமையை பறிக்கும் விதமாக மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை அரசு அதிகாரிகளே தன்னிச்சையாக செயல்படுத்துகின்றனர் . இச்செயல்பாடுகளால் பல்வேறு குளறுபடிகள் நடக்க வாய்ப்புள்ளது .

மேலும் ஊராட்சி தலைவர்களின் உரிமையை பறிக்கும் விதமாக இச்செயல் உள்ளது . எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர்களுக்கு அரசினால் செயல்படுத்தப்படும் அரசு ஊரக வேலை வாய்ப்பு திட்டப்பணிகளை ஊராட்சி தலைவர்களுக்கும் , நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்த வேண்டும் என கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் , அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை .

Leave a Reply