இன்றைய ராசிபலன்கள் 24.07.2020 (வெள்ளிக்கிழமை)

இன்றைய ராசிபலன்கள்
24.07.2020 (வெள்ளிக்கிழமை)
நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
ராகு காலம் 10.30 மணி முதல் 12 வரையில்
எமகண்டம் பிற்பகல் 3 மணி முதல் 4.30 வரையில்

மேஷம்

நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து உங்களுக்கு பண உதவிகள் வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடன்பிறந்தவர்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரிகளை பொறுத்தவரையில் லாபம் இரட்டிப்பாகும்.

ரிஷபம்

உங்களுடைய நம்பிக்கை மேலும் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை துணிவுடன் எடுப்பீர்கள். உங்கள் ஆலோசனைகளை கேட்டு அதன் படி நடப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பிறக்கும் நாள் இது.

மிதுனம்

நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதமாக வந்து சேரலாம். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அது அனுபவசாலிகள் இடமும் கேட்டு தெளிவு பெறுங்கள். வியாபாரிகளை பொருத்தவரையில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை விட கூடுதலாக லாபம் கிடைக்கும். பெண்களுக்கு புகுந்த வீட்டிலிருந்து சில நன்மைகள் வந்து சேரும். சகோதர வழியில் உதவிக் கேட்டு தொந்தரவு செய்வார்கள்.

கடகம்

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமானதாக இருக்கும். நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்த படி செய்து முடிப்பீர்கள். சில வேலைகளில் உங்களுக்கு கண்டிப்பாக வெற்றியும் கிடைக்கும். இக்கட்டான நேரத்தில் நண்பர்கள் வந்து உதவி செய்வார்கள்.

சிம்மம்

இன்றைய நாள் உங்கள் பதட்டத்தை தவிர்த்துவிடுங்கள். செலவுகள் அதிகரிப்பதால் கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். வியாபாரிகளை பொருத்தவரையில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. எந்த புதிய முயற்சிகளிலும் ஈடுபட வேண்டாம் .இன்றைய தினம் உங்களுக்கு நிதானமும் பொறுமையும் மிக அவசியம்.

கன்னி

உங்களது செயல்கள் இன்று நல்ல அனுபவத்தை தரும். மனதில் இருந்த குழப்பங்கள் தீரும். இன்றைய நாள் உங்களுக்கு உறவினர்களால் நன்மைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். வியாபாரிகள் பொருத்தவரையில் வியாபாரம் மந்த நிலையில் காணப்படும்.

துலாம்

சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தையில் ஈடுபடுவீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும் நாளிது. நீங்கள் எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரவு வந்து சேரும். வியாபாரிகளை பொறுத்தவரையில் இலாபம் ஓரளவு கிட்டும். பெண்கள் இன்று உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படுவார்கள்.

விருச்சிகம்

இன்றைய நாள் பொறுமையும் நிதானமும் வேண்டும். சில பிரச்சனைகள் தோன்றி மறையும். கணவன் மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இருப்பினும் முற்பகலில் இருந்த கவலைகள் பிற்பகலில் காணாமல் போகும். வியாபாரிகளை பொறுத்தவரையில் சக வியாபாரிகள் உங்களின் ஆலோசனையை கேட்டு தெளிவு பெறுவார்கள்.

தனுசு

இன்றைய நாள் செயல்களில் உங்களுக்கு நிதானம் அவசியம். தேவையற்ற விஷயங்களில் தலையிடுவது தவிர்த்துவிடுங்கள் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். ஒரு காரியத்தை பலமுறை யோசித்து செய்யுங்கள். தந்தையின் உடல்நலனில் அக்கறை காட்டுவது நல்லது.

மகரம்

இன்றைய நாள் உங்கள் மனதில் உற்சாகம் ஏற்படும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுடன் சில நற்செய்திகளில் வீட்டிற்கு வந்து சேரும். வீட்டிலேயே எளிமையான முறையில் சில சுப நிகழ்ச்சிகளை நடத்த வாய்ப்பு உண்டு. வியாபாரிகளை பொறுத்தவரையில் லாபம் நீங்கள் எதிர்பார்த்த அளவு கிடைக்கும்.

கும்பம்

உங்கள் சகோதரர்களால் ஆதாயம் உண்டு. உங்கள் உடலில் இருந்த சில பிரச்சனைகள் நீங்கி உடல் ஆரோக்கியத்தில் மேம்படுவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பணம் கைக்கு வந்து சேரும். பொருளாதார நிலைமை மேம்படும். குடும்பத்தில் மூன்றாம் நபரின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது.

மீனம்

இறைவழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை வந்து சேரும். செலவு அதிகரித்தாலும் அதை சமாளிக்கும் திறன் ஏற்படும். பெண்களைப் பொறுத்த வரையில் இன்று சோர்வாக காணப்படுவார்கள். வியாபாரிகளை பொருத்தவரையில் லாபமும் நஷ்டமும் ஏற்படாமல் இருக்கும்.

Leave a Reply