மனைவியை தள்ளி விட்டு, பெற்ற மகள் கதறிய நிலையிலும் கள்ளக்காதலியுடன் தந்தை சென்ற சம்பவம்..!

திருப்பதி சின்னகாப்பு வீதியை சேர்ந்த சரஸ்வதி மார்கெட்டில் தக்காளி வியாபாரம் செய்து வரும் வெங்கடாசலம், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

பல ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் ஓடிக்கொண்டிருந்த குடும்ப வாழ்க்கையில் பெண் ஒருவர் தலையிட்டதால் சுமூக வாழ்க்கை தலைகீழானது, காதல் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாமல் வெங்கடச்சலம் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டு வேறு ஒரு இடத்தில் குடும்பம் நடத்தி வந்தார்.

அந்த பெண்னும் தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், வெங்கடாசலம் வீட்டுக்கு வருவதை நிறுத்தியுள்ளார். கள்ளக்காதல் விவகாரம் தெரிந்த மனைவி, தன்னை கணவருடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கள்ளகாதலியுடன் வெங்கடாசலம்போலீசாரால் விசாரனைக்கு வரவழைக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த முதல் மனைவி சரஸ்வதி தனது குழந்தையுடன் காவல் நிலையத்திற்கு வந்தார். ஆனால் போலீசார் எதுவும் கண்டு கொள்ளவில்லை.

விசாரணை முடிந்து வெங்கடாசலம் பைக்கில் கள்ளகாதலியுடன் வெளியே வந்த போது முதல் மனைவியும் அவரது குழந்தையும் கண்ணீர் விட்டு கதறியபடி வண்டியை நிறுத்தக் கூறினர். ஆனால் முதல் மனைவியை தள்ளி விட்ட வெங்கடாசலம், தனது மகள் ‘டாடி.. டாடி…’ என்று அழுதபடி கத்தியும் நிற்காமல் வேகமாக பைக்கை ஓட்டி சென்றான்.

இதனால் சரஸ்வதி சாலையில் அமர்ந்து அழுதபடி தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறினார். அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், இதுகுறித்து திஷா பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் படி தெரிவித்தனர். திஷா காவல் நிலையத்திற்கு சென்று சரஸ்வதி புகார் அளிக்க சென்றபோது டி.எஸ்.பி வந்த பிறகு வரும் படி கூறினார்.

Leave a Reply