பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து குமரிமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விகடன் குழுமத்தில் செய்தியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்காக பணியில் இருந்து விலக வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் ஹசீப் . அதே வேளையில் , உச்சபட்சப் பொறுப்பில் இருந்த குணசேகரன் இனி விவாத நிகழ்ச்சிக்கு மட்டும் நெறியாளராகப் பணியாற்றுவார் எனக் கூறப்பட்டிருக்கிறது .

விவாதங்களின் தலைப்பைக் கூட இனி அவரால் முடிவுசெய்ய முடியாது என்பதே இந்தப் பணிக்குறைப்பின் சாரம் மேலும் , மாரிதாஸ் வெளியிட்ட லிஸ்டில் இருந்த பத்திரிகையாளர்களில் மேலும் சிலர் கடந்த வாரத்தில் பணிநீக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டு , பணியில் இருந்தும் விலகியிருக்கின்றனர் . குணசேகரனைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கின்றன தமிழ் ஊடகத்துறையில் ஊடுறுவியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் சக்திகள் . தோழர் ஹசீப் தமிழக ஊடகங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட பல்வேறு செய்தியாளர்களுக்காக முன்வந்து போராடியிருக்கிறார்.

தமிழ் ஊடகத்துறையில் பத்திரிகையாளர்களின் உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தவும்,குரல் கொடுக்கவும் தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியில் கடந்த ஆண்டுகளில் ஈடுபட்டிருக்கிறார் . அவர் முன்னின்று பணியாற்றிய மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் கடந்த ஆண்டுகளில் புதிய தலைமுறை , வேந்தர் டிவி , காவேரி டிவி , கேப்டன் டிவி முதலான நிறுவனங்களில் பணியாற்றி , பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்காகப் போராடி , நஷ்ட ஈடுகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது . ஆர்.எஸ்.எஸ் முதலான மதவாத சக்திகள் , தோழர் ஹசீப்பின் பெயரால் மத அடிப்படையிலான மோதல்களுக்குத் திட்டமிடுகிறது.

தோழர் ஹசீப்பின் பணிநீக்கம் என்பது கருத்து சுதந்திரம் மீதான அடக்குமுறை மட்டுமல்ல ; தொழிலாளர் உரிமைகளுக்காகப் பத்திரிகையாளர்கள் ஒன்றுசேர்வதைத் தடுக்கும் நடவடிக்கையும் என கூறி குமரிமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் A.முகமது ரசூல் மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார், யூசுப்(தலைமை கழக பேச்சாளர்-தமுமுக) நசீர ஹுசைன் பொருளாளர், ஜஹபர் சாதிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply