நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம் பகுதிகளை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்..!

நாகர்கோவில் மற்றும் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய பகுதிகளை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் மற்றும் இளைஞர்கள் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. மாநகர செயலாளர் மகேஷ் மற்றும் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் ஏற்பாட்டில் தேரேகால்புதூரைச் சேர்ந்த மதன் மற்றும் விசால் ஆகியோர் தலைமையில் 130 பேர் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் ஆஸ்டின் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி, பொதுக்குழு உறுப்பினர் ஷேக்தாவூது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply