CITU சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழகம் தழுவிய வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்..!

மாற்று வேலைகளுக்கு செல்லும் வாடகை கார் ஓட்டுனர்கள் அவர்களுக்காக குரல் கொடுக்கும் அரசியல் போராளிகள். தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம் CITU சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழகம் தழுவிய வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு முழுவதும் மோட்டார் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு பல இலட்சம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவால் வாகன போக்குவரத்து இல்லாமல் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு கொரோனாவால் வாழ்வாதாரம் இழ்நது தவிக்கும் ஓட்டுனர்களுக்கு
இ எம் ஐ தவணை அபராத வட்டியை நீக்கம் செய்ய வேண்டும்,இவ்வாண்டு முழுவதும் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்.

காலாவதியான சுங்கசாவடியை அகற்ற வேண்டும், மோட்டார் வாகன தொழிலுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும், ஓட்டுநர் குடும்பங்களுக்கு கொரோனா நல திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஓட்டுனர்களை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு கன்னியாகுமரி டிஸ்டிரிக்ட் மோட்டார் ஒர்க்கர்ஸ் யூனியன் மற்றும் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம்.CITU சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது…

Leave a Reply