மார்த்தாண்டத்தில் டேங்கர் லாரியில் கடத்திய 20 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல் டிரைவர் கைது..!

மார்த்தாண்டத்தில் டேங்கர் லாரியில் கடத்திய 20 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் போஸ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு மார்த்தாண்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள் திக்குறிச்சி பகுதியில் சென்ற போது ஒரு டேங்கர் லாரி வந்தது.

அதை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது உரிய அனுமதியின்றி கோவையில் இருந்து 20 ஆயிரம் லிட்டர் டீசல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் டேங்கர் லாரியுடன் டீசலை பறிமுதல் செய்து டிரைவர் காளியண்ணனை கைது செய்தனர்.

Leave a Reply