நாகர்கோவிலில் பரபரப்பு வயதான முதியவர் 5 வயது சிறுமியிடம் சில்மிஷம்..!

நாகர்கோவிலில் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 69 வயதுடைய முதியவரை நாகர்கோவில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயினுலாபுதீன் (வயது 69). இவர் அதே பகுதியை சேர்ந்த யு.கே.ஜி. படிக்கும் 5 வயது சிறுமியை மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி தனியாக மறைவான இடத்திற்க்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தனர்.பின்னர் அங்கு பொதுமக்கள் கூடியதில் கையும் களவுமாக முதியவர் சிக்கிக்கொண்டார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் ஜெயினுலாபுதீன் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
வயதான முதியவர் 5 சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுப்பட்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply