கொரோனாவால் உயிரிழந்த டாஸ்மார்க் பணியாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி ஆர்பாட்டம்..!

கொரோனாவால் மதுரை வடக்கு மாவட்டத்தில் மரணமடைந்த பணியாளர் வேல்முருகன் ராஜா விழுப்புரம் ரவிச்சந்திரன் அவர்களின் குடும்பத்திற்க்கு 50 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் பாதுகாப்பு கவச உடை வழங்க வேண்டும்.

உயிரிழந்த டாஸ்மார்க் பணியாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் அனைத்து டாஸ்மாக் பணியாளர் சங்கங்களின் கூட்டு குழு சார்பாக செண்பகராமன் புதூரில் வைத்து மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் தலைமை மாநில செயலாளர் தொ.மு.சஇளங்கோ , டாஸ்மார்க் பணியாளர் நடேசன், மால்டன் ஜெனின், முருகன் SC / ST,ஷாபு, அசோக்குமார், சஜித்குமார், மால்டன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply