குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!

ராஜீவ்காந்தி பஞ்சாயத் ராஜ் காங்கிரஸ் கமிட்டி குமரி மேற்கு மாவட்டம் சார்பில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு நாட்டு மக்களுக்கு கொரோனாவை காட்டி பயமுறுத்தி வருகிறதாகவும், குமரிமாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சைப்பெற்றும் வரும் இடங்களில் கழிவறை வசதிகள் இல்லை என்றும் அவர்களுக்கு சரியான நேரங்களில் உணவு வழங்கப்படவில்லை என்றும்.

குமரிமாவட்டதில் இபாஸ் கிடைப்பதில் காலதாமதம் செய்யப்படுவதாகவும் தமிழ்நாட்டில் குமரிமாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களிலும் இபாஸ் சேவை மக்களுக்கு பயன் தருவதாகவும். குமரியில் மட்டும் மிகவும் காலதாமதமாக கிடைக்கிறது என்றும் அதே போல் குமரிமாவட்ட கொரோனா பரிசோதனை சாவடிகளில் வெகு நேரம் மக்கள் காத்து கிடந்து அங்கும் உணவும் கழிவறை வசதியும் இல்லாமல் அவதி படுவதாகவும் தெரிவித்து இது போன்ற புகார்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்து காங்கிரஸ் கமிட்டி ராஜீவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சார்பில் குமரிமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் குமரிமாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்ராஜ் காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர்.சாமுவேல் சார்ஜ் தலைமை தாங்கினார்,மற்றும் எஸ்.ஷாஜி,காங்கிரஸ் மேற்கு மாவட்ட செயலாளர்.குருஸ்சுமுத்து,காங்கிரஸ் மேற்கு மாவட்ட நகர தலைவர்.ரமேஷ்,சுஜின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

Leave a Reply