குமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..!

குமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரிமாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் CITU கட்சி தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தையல் நல வாரியத்தில் இருந்து 10 மாதமாக வழங்கப்படாத ஓய்வூதியத்தை நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்க வேண்டும். கரோனா காலத்தில் 60 வயது பூர்த்தி அடைந்த தொழிலாளர்களை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் காரோனா நிதியாக மாதந்தோறும் 7500 மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்க வேண்டும். தையல் தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க மானியத்துடன் தொழில் கடன் வழங்க வேண்டும்.

கூட்டுறவு தையல் உறுப்பினர்களுக்கு வருடந்தோறும் உயர்த்தி வழங்க வேண்டிய 5 சதவீத கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். கோட்டு தைப்பதற்கான கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரிமாவட்ட தையல் கலைஞர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Leave a Reply