இன்றைய ராசிபலன்கள் 22-07-2020 (புதன்கிழமை)

இன்றைய ராசிபலன்கள்
22-07-2020 (புதன்கிழமை)
நல்ல நேரம்
காலை 9.15 மணி முதல் 10.15 வரையில்
மாலை 4.45 முதல் 5.45 வரையில்
ராகு காலம் : காலை 12.00 மணி முதல் 1.30 வரையில்
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 வரையில்

மேஷம்
இன்று எவ்வளவு தான் பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும். உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

ரிஷபம்
இன்று நீங்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. அவர்களது திடீர் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்
இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

கடகம்
உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால், மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைபிடிப்பது அவசியம். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

சிம்மம்
இன்று உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துக் கொள்ளவும். புதிய முயற்சி சாதகமாக முடியும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும்.

கன்னி
தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படக் கூடும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

துலாம்
எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆதாயமும் தருவதாக அமையும்.

விருச்சிகம்
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். கூடுமானவரை வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்து விடவும்.

தனுசு
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். தந்தையின் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும்.

மகரம்
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். நண்பர்களின் சந்திப்பு ஆறுதலும் மகிழ்ச்சியும் தருவதாக இருக்கும்.

கும்பம்
முக்கிய முடிவு எடுப்பதற்கு முன்பு வாழ்க்கைத்துணையுடன் ஆலோசனை செய்வது நல்லது. பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும்.

மீனம்
அனுகூலமான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உங்களை எதிர்த்துப் பேசியவர்கள் பணிந்து வருவார்கள். சகோதரரிடம் கேட்ட உதவி கிடைக்கும்.

Leave a Reply