மனித பாதுகாப்பு கழகம் சார்பில் குமரிமாவட்ட ஆட்சியரிடம் மனு..!

மனித பாதுகாப்பு கழகம் சார்பில் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கேட்டு குமரிமாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது நூற்றிற்கும் மேற்பட்ட கொரோனோ நோயாளிகள் சிகிட்சை பெற்று வருகின்றனர் . மருத்துவமனை நிர்வாகம் கொரோனா நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்காமல் நோயாளிகளை அலைக்களிக்கின்றனர் என்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் சூழலில் பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சரியான உணவு , மருந்து , கழிப்பிட வசதிகள் இல்ல என்று தினந்தோறும் மருத்துவமனைக்குள் நோயாளிகளே போராட்டங்களில் ஈடுபடுகின்றனர் . இதனை மருத்துவ கல்லூரி முதல்வர் கண்டுகொள்ளாமல் இருப்பதாக செய்திகள் வருகின்றன. கொரோனா நோயாளிகளை ஏதோ கொடுஞ்செயல் செய்தவர்களைபோல் நடத்துவது மனித உரிமை மீறல் செயலாகும் என்றும் கல்லூரி முதல்வரின் இச்செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது என்றும் குற்றச்சாட்டு எழுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் , கொரோனா நோயாளிகளின் மீது அக்கறை கொண்டு , உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும் அரசின் வழிகாட்டுதல்படி கொரோனா நோயாளிகளுக்கு சிகிட்சை அளித்திட கேட்டும் ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனையின் முதல்வரை உடனடியாக பணிடமாறுதல் செய்து , திறமையான முதல்வரை நியமனம் செய்யது மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனித பாதுகாப்பு கழகம் சார்பில் குமரிமாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Leave a Reply