பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் திட்டுவிளை பஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திர தேவ் தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் மணி, பேரூர் காங்கிரஸ் தலைவர் கலீல் ரகுமான், இளைஞர் காங்கிரஸ் பேரூர் தலைவர் சேம் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில பொதுச்செயலாளர் வின்ஸ் எல்ஜின் கலந்து கொண்டார். போராட்டத்தில் தோவாளை வட்டார தலைவர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply