பிரதமர் அலுவலக இணை செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமனம் மகிழ்ச்சி முதலமைச்சர் வாழ்த்து..!

ஐஏஎஸ் அதிகாரி அமுதாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதுரையை சேர்ந்த அவர் 1994ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரி. அவர் தற்போது பிரதமர் அலுவலகத்தின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

தனது நேர்மையாலும், திறமையாலும் அரசின் நன்மதிப்பையும், மக்களின் அன்பையும் பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா அவர்கள், பிரதமர் அலுவலகத்தின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவரது பணி சிறக்க தன்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறி உள்ளார்.

அமுதா ஐஏஎஸ் தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும், உணவு பாதுகாப்பு ஆணையராகவும் பணியாற்றி வந்துள்ளார். பணி காலத்தில், அப்துல் கலாம், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளை சிறப்பாக ஒருங்கிணைத்து நற்பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply