தமிழக அரசை கண்டித்து சுரேஷ்ராஜன்MLA அவர்கள் தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர். என்.சுரேஷ்ராஜன் அவர்கள் தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார். கொரோனா காலக்கட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தமிழக மக்களுக்கு ஊரடங்கு கால மின்கட்டணத்தில் முரண்பாடுகளோடு மின்கட்டண உயர்வை கொடுத்து உள்ளது.

இதனால் தமிழக மக்களை கடனாளியாக்கும் தமிழக அரசையும் மின்சாரத்துறை அமைச்சரையும் கண்டித்து திமுக சார்பில் கட்சியினர் வீடுகளின் முன்பு கருப்பு சட்டை அணிந்தும் கருப்பு கொடி, ஏந்தியும் சமூக இடைவெளியுடன் அ.தி.மு.க அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Leave a Reply