குருந்தன்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட 15 பகுதிகளில் தி.மு.க சார்பில் கருப்புக் கொடி ஏந்தி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம்..!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மின் கட்டண உயர்வைக் கண்டித்து  21ஆம் தேதி முதல்வர் பழனிசாமி அரசுக்கு எதிராகக் கருப்புக் கொடி ஏந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்படும் என அறிவித்தார்.

அதன்படி குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.சுரேஷ்ராஜன் எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின் படி குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.குட்டிராஜன் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் குருந்தன்கோடு ஊராட்சி முன்னாள் பொறுப்பாளர் திரு.எம்.பெர்வின்விஜய் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் இன்று குருந்தன்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட 15 பகுதிகளில் கிளைச் செயலாளர்கள் தலைமையில் சமூக இடைவெளியுடன் தமிழக அரசைக் கண்டித்து கருப்பு கொடி ஏந்தி, அ.தி.மு.க அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Leave a Reply