கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 156 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,985 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 70 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,551 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 87,235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 156 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 2,619 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply