நாகர்கோவில் தற்காலிக மீன் சந்தையால் மீன் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீன் விற்பனையாளர் புலம்பி வருகினறனர்..!

தற்காலிக மீன் சந்தையால் மீன் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீன் விற்பனையாளர் புலம்பி வருகினறனர்.

கொரோனா தொற்று குமரிமாவட்டத்தில் தினசரி சந்தைகள் மூலமாக பரவி வருவதால் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க பல்வேறு விதமான கட்டுப்பாடு விதிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. இதனால் கணேசபுரம் மீன் சந்தை சீல் வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கோட்டார் ஆயுர்வேத மருத்துவனை பின்புறம் உள்ள இடத்தில் தற்காலிக மீன் சந்தை அமைக்கப்பட்டுள்ள நிலையில் மீன் வியாபாரிகள் இந்த இடத்தில் தண்ணீர் வசதி இல்லை என்றும் பொதுமக்களுக்கு இந்த இடம் தெரியாது என்றும் அதனால் மீன் வியாபாரம் இல்லை என்றும் புலம்பி வருகின்றனர்.

Leave a Reply