நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரியில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோட்டாறு பகுதியில் உள்ள அரசு ஆயுர்வேத கல்லூரியில் ஆய்விற்கு பின் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.

கொரோனா நோயாளிகளை ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் அதிகாரப்பூர்வமாக அரசுக்கு கோரிக்கை விடுத்தால் அதற்கான அனுமதியை அரசு வழங்க தயாராக உள்ளது.

தமிழகம் முழுவதும் சித்த மருத்துவத்துறை ,ஆயுர்வேத மருத்துவதுறை மருத்துவர்கள் நேரடியாக களத்திற்கு சென்று கொரோனா நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு பல்வேறு வகையில் ஊக்கம் அளித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதற்கான மருத்துவ வசதிகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் டெக்னீசியன் கள் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் தமிழக அரசு 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளது. இருப்பினும் எதையும் எதிர்பாராமல் தமிழக முதலமைச்சர் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மக்களுக்காக ஒதுக்கி பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

1 லட்சம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர் ,பிளாஸ்மா தானம் செய்ய அவர்கள் முன்வரவேண்டும்.

Leave a Reply