குமரி மாவட்டத்தில் 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூட அனுமதி இல்லை மாவட்ட ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூட அனுமதி இல்லை என குமரி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா நோய்த்தொற்றும் தற்போது வேகமாகப் பரவி வருவதால் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பலி தர்ப்பண நிகழ்ச்சிக்கு இந்த ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியில்லை எனவும் குமரிமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தந்து பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் , களபணியாளர்கள் மூலமாகவும் , சோதானச்சாவடிகள் மூலமாகவும் 67517 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் , – தற்போது கன்னியாகுமரி மாவட்டம் , ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா கவனிப்பு மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமானகளில் 1367 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 1023 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 5295 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் .

மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 4792 நபர்கள் வீட்டு தனிமைப் படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் , – ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் மொத்தத்தில் இதுவரை 8544 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . மேலும் ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் 6342 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன .

Leave a Reply