இன்றைய ராசிபலன் 19-07-2020 (ஞாயிற்றுக்கிழமை)

இன்றைய ராசிபலன்
19-07-2020 (ஞாயிற்றுக்கிழமை)
நல்ல நேரம்
காலை 6.15 முதல் 7.15 வரை
மாலை 3.15 முதல் 4.15 வரை
ராகு காலம்
மாலை 4.30 முதல் 6 வரை
எமகண்டம்
பிற்பகல் 12 முதல் 1.30 வரை

மேஷம்

இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கலாம். எந்த செயல் செய்தாலும் அதில் உங்களுக்கு பொறுமை மிக மிக அவசியம். உங்கள் சகோதரர்கள் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவார்கள். இன்றைய நாள் உங்களுக்கு ஒரு சுமுகமான நாளாக அமையும்.

ரிஷபம்

பொருளாதார நிலை மேம்படும். செலவுகள் அதிகரித்தாலும் அதை சமாளிக்கும் திறனை பெறுவீர்கள். உணவு விஷயத்தில் அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள் இல்லையென்றால் செரிமான பிரச்சனை ஏற்படும். இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும்.

மிதுனம்

நீங்கள் எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரவு வந்து சேரும். உங்களின் புதிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். உங்கள் தாய் வழி உறவினர்களால் தேவையான நேரத்தில் உதவிகளும் நன்மைகளும் வந்து சேரும். பேச்சில் நிதானம் தேவை.

கடகம்

உங்கள் நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். நீங்கள் தொட்ட காரியம் துலங்கும், செலவுகள் அதிகரிக்கும். அதனால் சேமிப்பில் கவனம் செலுத்துங்கள். இன்றைய நாள் சற்று ஏற்ற தாழ்வுடன் முடியும்.

சிம்மம்

மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்த்து விடுங்கள். இன்றைய நாள் சின்ன சின்ன பிரச்னைகள் தோன்றி மறையும். பேச்சில் கவனம் தேவை, இல்லையென்றால் அவபெயர் வந்து சேரும்.

கன்னி

பணவரவும் மகிழ்ச்சியும் நீடிக்கும். உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும். பொருளாதார நிலை சீராக அமையும். அனைத்தும் அனுகூலமாக நடக்கும் நாள் இது.

துலாம்

பொருளாதார நிலையில் மந்தம் ஏற்படும். கடன் வாங்கவேண்டிய சூழல் ஏற்படலாம். உங்களுக்கு இது நாள் வரை இருந்த குழப்பங்கள் தீரும். குடும்பத்தினர் ஆறுதலாக இருப்பார்கள்.

விருச்சிகம்

இன்றைய நாள் உங்களுக்கு உடல் சோர்வு ஏற்படலாம். முக்கிய வேலைகளை சீக்கிரம் முடிப்பது நல்லது. பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது, அதனால் பொருளாதார நிலையை பற்றி கவலைப்படாதீர்கள். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

தனுசு

இன்றைய நாள் உங்களுக்கு சுறுசுறுப்பாக இருக்கும். உறவினர்கள் ஆலோசனை உங்களை தேடி வரும். நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி உங்களை வந்து சேரும். அக்கம்பக்கத்தினர் துணையாக இருப்பார்கள்

மகரம்

வீண் செலவுகள் அதிகரிக்கும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை மற்றவர்களுடன் பேசும் போது கவனமாக பேசவும். மூன்றாம் நபர் உங்கள் குடும்ப விஷயத்தில் தலையிட அனுமதிக்காதீர்கள். பெண்களைப் பொறுத்தவரை இந்து உற்சாகமான நாளாக இருக்கும்

கும்பம்

உற்சாகமாக இன்று செயல்படுவீர்கள். முக்கியமான விஷயங்களில் துணிச்சலாக முடிவு எடுங்கள். எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு பணம் வரவு கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் லாபம் உண்டு. வியாபாரிகளை பொருத்தவரை இன்று விற்பனையும் லாபமும் மந்தமாக இருக்கும்.

மீனம்

உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் நாள் இது. உறவினர்களின் பாராட்டைப் பெறுவீர்கள் பண உதவி கேட்டு தொந்தரவு செய்வார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று மிக எளிமையாக நடந்து முடியும்.

Leave a Reply